நில்லாயோ - Bairava song Lyrics
மஞ்சள் மேகம்.. ஒரு மஞ்சள்
மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்.
பதரும் உடலும், என் கதறும்
உயிரும்
அவள் பேர் கேட்டு பின்னே
போகும்.
செல்லப் பூவே நான் உன்னை
கண்டேன்
சில்லுச் சில்லாய் உயிர் சிதறக் கண்டேன்
நில்லாயோ...
நில்லாயோ... உன் பேர் என்ன
உன்னாலே
மறந்தேனே என் பேர் என்ன.
கனவா கனவா நான் காண்பது
கனவா
என் கண் முன்னே கடவுள்
துகளா
காற்றில்
உடலா.
கம்பன் கவிதை மகளா
இவள் தேன் நாடின் நான்காம்
கடலா.
சிலிக்கான்
சிலையோ சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ.
நில்லாயோ...
நில்லாயோ.... உன் பேர் என்ன
உன்னாலே
மறந்தேனே என் பேர் என்ன.
செம்பொன்
சிலையோ இவள் ஐபோன் அழகோ
பிரம்மன்
மகளோ இவள் பெண்பால் வெயிலோ.
நான் உன்னை போன்ற பெண்ணை
கண்ட தில்லை
என் உயிரில் பாதி யாரும்
கொன்றதில்லை.
முன் அழகால் முட்டி மோட்சம்
கொடு
இல்லை பின் முடியால் என்னை
தூக்கிலிடு.
நில்லாயோ...
நில்லாயோ... உன் பேர் என்ன
உன்னாலே
மறந்தேனே என் பேர் என்ன.
No comments:
Post a Comment